தங்கம் விலை அதிரடி குறைவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
Updated: Aug 27, 2026, 18:43 IST
தமிழகத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது. இன்று காலையில் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,725-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800-க்கும் விற்கப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு இந்த விலை வீழ்ச்சி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம்போல ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் சந்தையில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
