வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... சர்...ரென குறைந்த தங்கம் விலை!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது. நேற்று இரண்டு முறை தங்கம் விலை குறைந்து ரூ.1,17,800-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் விலை குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவது சற்று அதிகரித்துள்ளது.

தங்கம்

இன்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை வீழ்ச்சி தங்கம் வாங்கும் திட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் தங்கத்தின்

அதேபோல், வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.