காலையில் இறங்கிய தங்கம் மாலையில் உயர்வு... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 

சென்னையில் தங்கம் விலை இன்று (ஆக.28) காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, தற்போது ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,890க்கு விற்பனையாகிறது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தங்கம் தங்கத்தின்

ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றமானது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் வர்த்தகச் சூழல் காரணமாகத் தங்கம் விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. இதனால் நடுத்தர மக்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்பத் தங்கத்தை வாங்குவதில் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

தங்கம்

சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் சிறு கலக்கத்தை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பலர் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.