ஒரே நாளில் அதிரடியாகச் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,800 குறைந்து விற்பனை!
தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,800 சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,175-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.225 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த திடீர் விலை குறைவு நடுத்தர மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் நேற்று ரூ.1,13,400-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,800 சரிந்து ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கு விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபரணத் தங்கத்தின் விலை திடீரெனக் குறைந்துள்ளதால் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
