மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
gold

 

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2,320 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் தங்கத்தின்

இதன் தொடர்ச்சியாக ஒரு சவரன் தங்கம் நேற்று 1,11,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 2,320 ரூபாய் அதிகரித்து 1,13,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள இந்த அதிரடி மாற்றம் நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

அதேபோல், வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.