சர்...ரென குறைந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
Sep 9, 2026, 10:15 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கு இது சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
-
சவரன் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
கிராம் விலை: தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,145-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
-
வெள்ளி விலை: சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


