வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடிச் சரிவு!

 
தங்கம்

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 11) திடீரெனக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்களும், பொதுமக்களும் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

தங்கம்

நேற்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 14,255-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 14,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் ரூ. 1,14,040-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 1,920 சரிந்து ரூ. 1,12,120-க்கு விற்பனையாகிறது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 10 குறைந்து ரூ. 245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 10,000 வரை குறைந்து ரூ. 2 லட்சத்து 45 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.