தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியை அடகு வைத்து மோசடி.. ரூ.16.31 லட்சம் அமுக்கிய 3 பேர் அதிரடியாக கைது!

 
திவ்யா - சரஸ்வதி - மணிவண்ணன்

தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியை அடகு வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, காந்திபுரம் ரெட்டிபாளையம் சாலையைச் சேர்ந்த திவ்யா (31), ஸ்ரீனிவாசபுரம் செக்கடியைச் சேர்ந்த சரஸ்வதி (38) ஆகியோர் நேற்று ஒரு வளையல் மற்றும் சங்கிலியை அடகு வைக்க இங்கு வந்தனர். அவர்கள்  பலமுறை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

மீண்டும், அடகு வைக்க அதே சங்கிலி மற்றும் வளையலை கொண்டு வந்தனர். சந்தேகமடைந்த நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில், அவர்கள் ஏற்கனவே அடகு வைத்திருந்த நகைகளை சோதனை செய்தபோது, ​​வெள்ளி நகைகள் தங்க முலாம் பூசப்பட்டு அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கல்லப்பெரும்பூர் போலீசார் அடகு கடைக்குச் சென்று திவ்யா மற்றும் சரஸ்வதியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் கீழவாசல் கொல்லுப்பேட்டை தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (37) என்பவர் போலி நகைகளை அடகு வைப்பதற்காக அவர்களிடம் அனுப்பியது தெரியவந்தது.

கைது

வீட்டில் இருந்த மணிவண்ணனை நேற்று கைது செய்து விசாரித்தனர். கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து போலி நகைகளை வாங்கி அடகு வைத்து மணிவண்ணன் இதுவரை ரூ.16.31 லட்சம் மோசடி செய்திருப்பதும், மணிவண்ணன் கொடுத்த நகைகளை திவ்யா மற்றும் சரஸ்வதி அடகு வைத்திருப்பதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிவண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் திவ்யா மற்றும் சரஸ்வதியை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த கவிதாவையும் தேடி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web