பிரபல ரவுடி கோல்டி பிராரை பிடிக்க $1 மில்லியன் பரிசு! FBI அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI, இந்தியாவைச் சேர்ந்த சதீந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிராரை தனது ‘Ten Most Wanted Fugitives’ பட்டியலில் சேர்த்துள்ளது. அவரை கைது செய்ய வழிவகுக்கும் தகவலுக்கு அதிகபட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியையும் FBI அறிவித்துள்ளது.செப்டம்பர் 28-ம் தேதி கோல்டி பிரார் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக FBI தெரிவித்துள்ளது. 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட FBI-யின் ‘Ten Most Wanted Fugitives’ பட்டியலில் சேர்க்கப்படும் 543-வது நபர் இவர் ஆவார்.
அமெரிக்காவில் செயல்படுவதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் அமைப்புடன் கோல்டி பிரார் தொடர்புடையவர் என FBI குற்றம்சாட்டியுள்ளது. அந்த அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் வன்முறை சம்பவங்களில் கொலை, துப்பாக்கிச்சூடு, கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்டவை இடம்பெறுவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
கோல்டி பிரார் வட அமெரிக்காவில் பிஷ்னோய் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்பட்டதாகவும், அதன் உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவியதாகவும் FBI தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.கோல்டி பிராருக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக FBI தெரிவித்துள்ளது. அமைப்புசார் குற்றச்சதி, மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படும் சதி மற்ற
