'குட் பேட் அக்லி’ இசையமைப்பாளர் மாற்றம்?!

 
குட் பேட் அக்லி


நடிகர் அஜித் குமார் தற்போது  குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பல்கேரியாவில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அங்கு படத்தின் க்ளைமேக்ஸ்  எடுக்கப்பட்டு வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் அஜீத் 3  வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

குட் பேட் அக்லி

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளது. அதன்படி ஜனவரி 10ம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  படத்தின் அறிவிப்பு வெளியானபோது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.  

குட் பேட் அக்லி

சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும்  ஜிவி பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!