புனித வெள்ளி... ஈஸ்டர் விடுமுறை... தமிழகத்தில் 1105 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
அரசுப் பேருந்து
உலகம் முழுவதும் கிறிஸ்தவ சகோதர்கள் இன்று புனித வெள்ளி தினத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், புனிதவெள்ளி, ஈஸ்டர் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இந்த 3 நாட்கள் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்குச் செல்பவர்களின் வசதிக்காக 1105 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.  

இந்த தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து சென்னைக்கும் கூடுதல் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அரசு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், இன்று 29ம் தேதி 300 பேருந்துகளும், நாளை 30ம் தேதி 345 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 30/03/2024 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் மறு மார்க்கமாக சென்னைக்கு திரும்புபவர்களின் வசதிக்காக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web