குட் நியூஸ்... கூட்டுறவு வங்கிகளில் FD வட்டி விகிதம் உயர்வு!

 
கூட்டுறவு வங்கி

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் ஐ. பெரியசாமி பதில்..!!

பொதுமக்களுக்கு வழங்கப்படுவதைத் தவிர்த்து, மூத்த குடிமக்களுக்கு இதனுடன் சேர்த்து கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனக் கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 8.50 சதவீத வட்டிப் பலனைப் பெறலாம்.

வைப்புத்தொகை வட்டி மாற்றத்துடன் சேர்த்து, நகைக்கடனுக்கான புதிய நிதி அளவீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 அல்லது தற்போதைய சந்தை மதிப்பில் 75 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.