விமான பயணிகளுக்கு குட்நியூஸ்... வாட் வரியை 29% லிருந்து 16% வாக குறைத்து தமிழக அரசு உத்தரவு!

 
முதல்வர் முதலமைச்சர் விஜய்

விமானப் பயணக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், விமானப் பயணங்களை மேலும் எளிமையாகவும் மலிவானதாகவும் மாற்றும் நோக்கில் தமிழக அரசு ஒரு மிக முக்கியமான மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, விமான எரிபொருளுக்கான மதிப்புக்கூட்டு வரியை கணிசமாகக் குறைத்துத் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுவரை அமலில் இருந்த அதிகப்படியான வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்களும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விமானம் விமான நிலையம்

தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கான எரிபொருளின் மீது இதுவரை 29 சதவீதமாக இருந்த மதிப்புக்கூட்டு வரி, தற்போது அதிரடியாகப் பாதியாகக் குறைக்கப்பட்டு 16 சதவீதமாக வசூலிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 13 சதவீதம் வரை வரியைக் குறைத்துள்ள இந்த அரசாணையானது, வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குப் பிறகு அதாவது நவம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த அதிரடியான வரிக்குறைப்பு நடவடிக்கை மூலம் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் பெருமளவில் மிச்சப்படும் என்பதால், அதன் நேரடிப் பலன் பயணிகளுக்கும் விமானக் கட்டணக் குறைப்பு வடிவில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு?!

விமான எரிபொருள் வரிக்குறைப்பால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற விமான நிலையங்களிலிருந்து நாட்டின் பல்வேறு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புதிய விமான வழித்தடங்கள் உருவாக்கப்படுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. விமானப் போக்குவரத்து எளிமையாகவும் குறைந்த செலவிலும் மாறும்போது, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தமிழகத்தில் மேலும் அதிகரிக்கும். மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகப் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகள் கிடைப்பதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் தொழில் வளர்ச்சியும் புதிய வேகமெடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.