ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்... சபரிமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

 
சிறப்பு

சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து 100 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐயப்பன் சபரிமலை இருமுடி

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சபரிமலை

அதன்படி, இந்த ஆண்டும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும் இதில் இடம்பெறுகின்றன. 

வரும் ஜனவரி 17ஆம் தேதி வரை இந்த சேவைகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.