நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்! சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 10) குறைந்துள்ளது. நேற்று உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று சரிவைக் கண்டிருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.13,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.360 சரிந்து ரூ.1,05,680-க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் அதன் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
