குட் நியூஸ்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 வரை குறைய வாய்ப்பு!
சர்வதேச பொருளாதார நிலவரங்கள் மற்றும் மத்திய அரசின் புதிய ஆலோசனைகளால் தங்கம் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், அது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 15 சதவீதமாக உயர்த்தப்பட்ட தங்கத்தின் இறக்குமதி வரியை மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் நாட்டில் சட்டவிரோத தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்ததே இந்த மறுபரிசீலனைக்கு முக்கியக் காரணமாகும்.

இந்த வரி குறைப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.10,000 வரை அதிரடியாகக் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
