குட் நியூஸ்... மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
டாஸ்மாக்

அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் மதுக்கடையை அங்கிருந்து மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

டாஸ்மாக்

இது குறித்து சுந்தர் தாக்கல் செய்திருந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “2019-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும் கடையை காலி செய்யாதது ஏன்? இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா? மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் மதுக்கடையை மாற்ற வேண்டும். குத்தகை காலம் முடிந்து விட்டால் டாஸ்மாக் கடைகளை காலி செய்ய வேண்டும் என நிர்வாக இயக்குநருக்கு ஐகோர்ட் உத்தரவிடுகிறது” என்று தெரிவித்தார். 

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடையை விரும்பாத மக்கள், தங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு செய்து, தீர்வு காணலாம். டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள் என்று பொதுவாக எப்போதும் அரசைக் குறைச் சொல்லிக் கொண்டிருக்காமல் உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளில் இருந்து இந்த சமூகம் விடுபட நினைத்தால், உங்கள் பகுதியில் தேவையில்லாமல் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி முன்னெடுப்பு செய்து தீர்வு காணலாம் என்று சமூக வலைத்தளங்களில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!