குட்நியூஸ்... நடிகை மணிமேகலை சொந்த வீட்டில் பால்காய்ச்சி கிரகப் பிரவேசம்!
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக கெரியரை தொடங்கியவர் நடிகை மணிமேகலை. இதனை படிப்படியாக விஜய் டிவிக்கு மாறினார். 2017ல் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.ஹுசைன் லாரன்ஸ் மாஸ்டரிடம் டான்சராக பணிபுரிந்தார். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் ஹுசைன் சைடு டான்சராக நடனமாடுவதை பார்த்து இம்ப்பிரஸ் ஆன மணிமேகலை அவர் மீது காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

சென்னையில் வாடகை வீட்டில் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட மணிமேகலைக்கு விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்துகொண்டு கலக்கி மணிமேகலை, ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகி பின்னர் ஆங்கராக பணிபுரிந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை, சமீபத்தில் நடந்து முடிந்த அந்நிகழ்ச்சியின் 5வது சீசனில் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதலால், உங்க வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு விஜய் டிவியை விட்டு விலகிவிட்டார்.

விஜய் டிவியை விட்டு விலகிய கையோடு தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார் மணிமேகலை. அதன்படி தான் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் தகவலை சந்தோஷமாக பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீட்டிற்கு நேற்று கிரஹப்பிரவேஷமும் செய்து அதில் குடியேறி இருப்பது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள மணிமேகலை, திருமணமான பின்னர் மாதம் ரூ10000 வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம், ஆனால் இன்று சென்னையின் பிரைம் லொகேஷனில் பிரீமியம் வீடு வாங்கி இருப்பதன் மூலம் எங்களது மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது. இது என் வாழ்வில் ஒரு சாதனையாக கருதுகிறேன்.யாருடைய உதவியும் இல்லாமல் ஜீரோவாக எங்களுடைய வாழ்க்கையை தொடங்கினோம் 2021ல் இந்த வீட்டை புக் செய்து விட்டு அதன் பணிகள் எல்லாம் முடிந்து தற்போது தான் எங்கள் கைக்கு வந்தது என குறிப்பிட்டு ஸ்ரீராம ஜெயம்; மாஷா அல்லாஹ் என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
