குட் நியூஸ்... சினிமா ஆர்வலர்களுக்கு ஏஐ திரைப்பட உருவாக்கப் பயிற்சி அறிமுகம்!
டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பிரிவு மூலம் சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரைத்துறை ஆர்வலர்களுக்காகச் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திரைப்படம் உருவாக்கும் புதிய பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய நவீன காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சிறப்புப் பயிற்சியானது கதை உருவாக்கம், திரைக்கதை எழுதுதல் மற்றும் காட்சிகளைப் காட்சிப்படுத்துதல் போன்ற ஆரம்பகட்டப் பணிகளில் ஏஐ கருவிகளை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்துப் பயிற்சியளிக்கிறது.

மேலும் வீடியோ தயாரித்தல், பின்னணி இசை அமைத்தல் மற்றும் ஒலிகளை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் ஏஐ தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் குறித்து விரிவாகக் கற்றுத்தரப்படவுள்ளது. குறைந்த செலவில் தரமான திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்க விரும்புவோருக்கு இத்தகைய நவீனப் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
