குட் நியூஸ்... இனி இந்தியர்கள் மலேசியா செல்ல விசா கட்டணம் கிடையாது!

 
விசா சுற்றுலா விமானம்

இந்தியர்கள் இனி மலேசியா சென்று வர விசா கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, வியட்நாம், இலங்கை நாடுகள் ஏற்கெனவே இந்தியர்களுக்கு விசா கட்டணங்களை ரத்து செய்துள்ள நிலையில், டிசம்பர் 1ம் தேதி முதல் இந்தியர்கள் மலேசியா வருவதற்கும் விசா கட்டணங்களை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலேசியா

மலேசியாவிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு,  சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இனி விசா கட்டணம் இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம்.  இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி 30 நாள்கள் வரை தங்கலாம்.

மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் (டிச.1) ஒன்றாம் தேதி முதல் நடமுறைக்கு கொண்டுவரப்படும்.  விசா தேவயில்லை என்றாலும் பயணிகள் குற்றப்பின்னணி அல்லது வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனரா என்பதை அறியப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும்.  இந்தியாவை விட சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web