குட் நியூஸ்... TNPSC முதல் TRB வரை அனைத்திற்கும் ஒரே செயலி - தேர்வுகளம்!

 
தேர்வுகளம்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனி புத்தகங்களையோ அல்லது இணையதளங்களையோ தேடி அலைய வேண்டிய அவசியமின்றி, அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

TNPSC (குரூப் 1, 2, 4), TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்), TET மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு (TNUSRB) எனத் தமிழக அரசின் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிமையான பாடக்குறிப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) உடனுக்குடன் இதில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் கற்றல் திறனைச் சோதித்துப் பார்க்க, பாட வாரியாகவும் முழுமையாகவும் ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டிஎன்பிஎசி   தேர்வு  தேதியில்  திடீர்  மாற்றம்

புத்தகங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவசியமின்றி, கைப்பேசி வாயிலாகவே எந்நேரமும் படிக்கும் வசதியை இது வழங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், அரசு வேலைவாய்ப்புக்காகத் தீவிரமாகப் படித்து வரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு இந்த 'தேர்வுக்களம்' செயலி ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.