குட்நியூஸ்... மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதம் ரூ14000 உதவித்தொகை!

 
மாற்றுத்திறனாளி


 
தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை அதிகரித்து இருப்பது குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்
1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு ரூ1000லிருந்து ரூ 2000 ஆக உதவி தொகை வழங்கப்படும்.
6 முதல் 8-ம் வரையிலான மாணவர்களுக்கு ரூபாய் 3000 -திலிருந்து 6000 உதவித்தொகை வழங்கப்படும்.
9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ4000லிருந்து  ரூ8000 ஆக உதவித்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள்
 பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ரூ6000லிருந்து  ரூ8000 ஆக உதவித்தொகை வழங்கப்படும்.
 தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ 7,000லிருந்து ரூ14,000 ஆக உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web