குட் நியூஸ்... முதுமையைத் தாமதப்படுத்தும் ஊசிச் சிகிச்சையைச் சோதிக்கும் அமெரிக்க நிறுவனம்!

 
ஊசி மூலம் கருத்தடை ஊசி மூலம் கருத்தடை

மனிதர்களின் நீண்ட நாள் கனவான முதுமையைத் தள்ளிப்போடும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி பயோடெக்னாலஜி நிறுவனம் ஒன்று முதுமையைத் தாமதப்படுத்தும் அதிநவீன ஊசிச் சிகிச்சையைச் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆராய்ச்சி, மனிதர்களின் ஆயுட்காலத்தையும் ஆரோக்கியத்தையும் நீட்டிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

'ER-100' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சோதனைச் சிகிச்சை, முதற்கட்டமாகக் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்குச் செலுத்தப்பட்டுத் தனது மருத்துவப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. வயது முதிர்வின் காரணமாகக் கண்ணில் உள்ள செல்கள் செயலிழந்து பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நோயாளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஊசி

மனித உடலில் உள்ள செல்கள் காலப்போக்கில் தங்களின் செயல்பாட்டுத் திறனை இழந்து முதுமை அடைவதே ஒட்டுமொத்த உடலின் முதுமைக்கும் காரணமாக அமைகிறது. இந்த ER-100 சிகிச்சையானது, உடலின் மரபணு அளவிலான மூலக்கூறுகளைத் தூண்டி, சோம்பலடைந்த அல்லது செயலிழந்த பழைய செல்களை மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

செல்களின் வயதாகும் வேகத்தை கணிசமாகக் குறைப்பதன் மூலம், மனித உடல் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கமாகும். இந்தச் சோதனையின் முடிவுகள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், எதிர்காலத்தில் வயது முதிர்வு தொடர்பான பல்வேறு நரம்பியல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.