குட் நியூஸ்... உலக பாரம்பரிய வாரம்.. இன்று முழுவதும் மாமல்லபுரத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்!

 
மாமல்லபுரம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று நவம்பர் 19ம் தேதி ஒருநாள் மட்டும் இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்

மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் இன்று அர்ஜுனன் தபசு எதிரே ஓவியப் போட்டியுடன் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

மாமல்லபுரம்

இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று எந்தவிதமான கட்டணமின்றிப் பார்வையிடலாம்.வழக்கமாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இலவசமாகக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது