தேசிய நல்லாசிரியர் விருது: 48 ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கவுரவம்!

 
teachers award

 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில், கல்வித்துறையில் சிறந்து விளங்கிய 48 ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளன. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் இவர்கள்ாற்றிய சேவைகள் இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தலா வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆசிரியர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டிப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.