ஜீன் முதல் கூகுள் பே சேவை நிறுத்தம்.. கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

 
கூகுள் பே

கூகுள் பே அப்ளிகேஷனின் சேவை அமெரிக்காவில் ஜூன் 4 முதல் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பயன்பாட்டை கூகுள் பே ஆப்பை விட வாலட் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Top 5 Google Pay tips and tricks for effortless transactions – India TV

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூகுள் பே ஆப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் கூகுள் பே அப்ளிகேஷனின் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 4 முதல் அமெரிக்காவில் பழைய கூகுள் பே செயலியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதாவது இப்போது அதன் பழைய பதிப்பு வேலை செய்யாது. அனைத்து அம்சங்களையும் கூகுள் வாலட் இயங்குதளத்திற்கு நகர்த்துவதன் மூலம் கூகுளின் கட்டணச் சலுகையை எளிதாக்குவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Google Wallet - Your Fast and Secure Digital Wallet

அமெரிக்காவில் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற சந்தைகளில் கூகுள் பே ஆப் தொடர்ந்து சுமூகமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Google Pay பயனர்கள் Google Wallet பயன்பாட்டிற்கு மாறுமாறு கூகுள் அறிவுறுத்துகிறது. Google Pay இணையதளம் மூலம் பயனர்கள் தங்கள் கணக்கு இருப்பைக் காணலாம் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web