'ஸ்கில்ஸ்' முறையை அறிமுகப்படுத்துகிறது கூகுள் - ஜெமினி ஏஐ புதிய அப்டேட்!
கூகுள் ஜெமினியில் பயனர்களின் தேவைகளை எளிமைப்படுத்தும் வகையில் 'ஜெம்ஸ்' வசதிக்குப் பதிலாக 'ஸ்கில்ஸ்' என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பயனர்கள் தங்களுக்குத் தேவையான பணிகளுக்காகத் தனிப்பயனாக்கி உருவாக்கிய 'ஜெம்ஸ்' வசதி விரைவில் மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 'ஸ்கில்ஸ்' என்ற புதிய முறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் நவம்பர் 17-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
பயனர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள ஜெம்ஸை மீண்டும் புதிதாக உருவாக்கத் தேவையில்லை. அவை தன்னிச்சையாக ஸ்கில்ஸாக மாற்றப்படும் என்றும், அதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட வழிமுறைகளும் விருப்பங்களும் மாறாமல் அப்படியே இருக்கும் என்றும் கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இனி ஜெமினி உரையாடலின் போது தேவையான ஸ்கில்லை எளிதாகத் தேர்வு செய்ய "/" டைப் செய்து பயன்படுத்தும் புதிய வசதியும் வழங்கப்படவுள்ளது.
