உஷார்... Googleன் இந்த சேவை நாளையுடன் மூடப்படுகிறது... உடனே டேட்டா ட்ரான்ஸ்பர் பண்ணுங்க.... டேட்டா ட்ரேன்ஸ்பர் செய்வது எப்படி?

 
கூகுள்
 

 


நாளை ஏப்ரல் 2ம் தேதியுடன் கூகுல் பாட்கேஸ்ட்ஸ், தனது சேவையை நிறுத்தப்போகிறது, ஏற்கனவே இந்த சேவையை நிறுத்தப்போவதாக கடந்த செப்டம்பர் 2023ல் அறிவித்திருந்தாலும், இதற்கான காலகெடு நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

கூகுள்


இந்நிலையில், உங்கள் டேட்டா  கூகுள் பாட்கேஸ்ட்ல இருந்தால், உடனடியாக அவற்றை யு-ட்யூப் மியூசிக்கிற்கு மாற்றிக் கொள்ளுங்க. 
டேட்டாவை யு-ட்யூப் மியுஸிக்கிற்கு எப்படி ட்ரேன்ஸ்பர் செய்வது?

கூகுள்


கூகுள் ப்ரோட்காஸ்ட் ஆப்பிற்குள் நுழையவும். அதன் பின்னர், ஸ்க்ரீனில் தெரியும் எக்ஸ்போர்ட் சப்ச்க்ரிப்சன் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது யு-ட்யூப் மியூசிக்கிற்கு எக்ஸ்போர்ட் செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுங்க. அதன் பின்னர், திரையில் கேட்கும்  Continue ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். 
இப்போது உங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் குறித்த விவரங்களைப் பார்க்க, லைப்ரரி பக்கத்திற்கு  செல்லவும்.

From around the web