ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

 
வீரமணி சாந்தி

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர். வீரமணி, அவரது கூட்டாளிகளான மகேந்திர சிம்மன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய மூன்று பேர் மீதும் சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

கிரானைட் வீரமணி

இந்த வழக்கினை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தொடர் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள இவர்கள் மூவரும், தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.