ஒழுங்கா ஆட்சி செய்தா ஏன் பேசப் போறோம்... வந்ததுமே ஆவேசமான சவுக்கு சங்கர்!
திமுகவுக்கு எதிராக பேசவே கூடாது என்றும், திமுகவுக்கு ஆதரவாக பேசினால் வெளியில் விடுவதாகவும் என்னை சிறையில் மிரட்டினார்கள். ஒழுங்கா ஆட்சி செய்தா நாங்க ஏன் பேசப் போறோம்... என்று நேற்று சிறையில் இருந்து வெளியே வந்ததுமே ஆவேசமாக பேசத் தொடங்கினார் சவுக்கு சங்கர்!
முன்னதாக, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. விசாரணையின் போது சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்தது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4-ம் தேதி தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது கஞ்சா வைத்திருந்ததற்காக சவுக்கு சங்கர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது தொடர் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதை சென்னை உயர்நீதிமன்றம் நிறைவேற்றியது. பின்னர் 9ம் தேதி அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், சவுக்கு சங்கர் மீது மீண்டும் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டார். இந்நிலையில் தான், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று வெளியே வந்ததும் பேசிய சவுக்கு சங்கர், முதல்வர் ஸ்டாலின் ஒழுங்காக ஆட்சி செய்தால் நாங்க ஏன் விமர்சிக்கப் போறோம் என்றார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!