பகீர்!! லாரியில் மோதி தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து!! அலறி துடித்த பயணிகள்!!

 
தீவிபத்து

கர்நாடகாவில் இருந்து நேற்று   அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு   சென்னை வேலப்பன்சாவடிக்கு   அருகே வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில்  கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரியுடன்  பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளானது.  இதில் டேங்க் வெடித்து லாரியும், பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.

தீவிபத்து
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக  காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள்  தீ பேருந்து முழுவதும் பரவி விட்டது. இதனால்   பேருந்தில் இருந்த பயணிகள் 22 பேர் வெளியே வரமுடியாமல் சிக்கித்தவித்தனர்.  விரைந்து வந்த தீயணைப்பு   வீரர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து 22 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.  லாரியின் பின் பக்கம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த விபத்து குறித்து    போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

அதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி மற்றும் கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநர் வில்சன் சந்தோஷ் இருவரிடமும்  இருவரிடமும் நடத்தப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி வேலப்பன்சாவடி சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய போது சென்னையை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில்  நேராக லாரி டீசல் டேங்க் மீது மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web