அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து... ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
ஆட்டோ விபத்து

மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இன்று காலை அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் காமின் கனி (50) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் பகுதியில் இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த ஆட்டோவும் அரசுப் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த மோதலில் ஆட்டோ பலத்த சேதமடைந்ததுடன், ஆட்டோவை ஓட்டி வந்த காமின் கனி (50) பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காமின் கனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து

அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதற்கான காரணம் குறித்துப் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சாலைச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.