அரசு பேருந்து மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி உயிரிழப்பு!

 
பேருந்து
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கஸ்ஸாலி (38). இவரது மனைவி நூருல் பாத்திமா (28). இவர்களுக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். 

முகமது கஸ்ஸாலி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நூருல் பாத்திமா திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

முகமது கஸ்ஸாலி (38), நூருல் பாத்திமா (28)

இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவரும் பைக்கில் ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களது பைக் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பாபநாசம் நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது.

இதில் படுகாயடைந்த தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web