பஸ் ஸ்டாப்ல நிற்காமல் சென்ற அரசு பேருந்து... பயணிக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க உத்தரவு!
அரசு பேருந்தில் ஏறியதும் பாதி தூரம் சென்றுக் கொண்டிருக்கும் போது டிக்கெட் எடுக்கையில் அங்கே எல்லாம் பேருந்து நிற்காது என்று பெரும்பாலான நடத்துநர்கள் தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு மரியாதைத் தருவதைப் போல சில பயணிகளை உதாசீனப்படுத்துவார்கள். அப்படி உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் 3 கி.மீ. தொலைவிலுள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணியை இறக்கி விட்டதால் அரசு போக்குவரத்து கழகம் ரூ.60,000 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சார்ந்த சற்குரு என்பவர் தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசுப் பேருந்தில் பேயன்விளைக்கு பயணம் செய்துள்ளார். பேயன்விளையில் இறங்க வேண்டும் என கூறிய போது இந்த பேருந்து அங்கு நிற்காது என நடத்துனர் கூறியதோடு, பயணியை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதன் பின்னர் 3 கி.மீ. தொலைவிலுள்ள காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு பயணியை அங்கே இறக்கி விட்டு விட்டனர்.
இது தொடர்பாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணியின் புகாருக்கு அரசு போக்குவரத்து கழகம் முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பயணியின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.60,000யை வழங்க வேண்டும் என்றும், இந்த அபராத தொகையை வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்திரவிட்டனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!