அட!! மஞ்சள் நிறத்தில் மாறும் அரசு பேருந்துகள்!!

 
மஞ்சள்

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களுக்கு மிக சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள், முதியவர்கள், மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் பல அதிரடி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.   அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது.

அரசு பேருந்து

அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.  பேருந்தில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள் என சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சீரமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பழைய வண்ணத்தை மாற்றி புதுவண்ணம் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிங்க் பேருந்து

ஏற்கனவே போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேருந்துகளில் நீலம், பிங்க், பச்சை   நிறங்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதனால் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி சாலைகளில் மஞ்சள், பச்சை, சிவப்பு , பிங்க், ஊதா என கலர் கலராக பேருந்துகள் வலம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web