அரசு மருத்துவமனை அலட்சியம்.. விபத்து சிகிச்சைப் பிரிவில் ஒய்யாரமாக படுத்து உறங்கிய தெரு நாய்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று இரவு இந்த அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவுக்குள் தெருநாய்கள் சுற்றித் திரிந்தன. இதை யாரும் கவனிக்காததால், ஒரு தெருநாய் விபத்து சிகிச்சைப் பிரிவில் வசதியாகப் படுத்து தூங்கியது. ஆனால், அங்கு பணிபுரியும் மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ கவனிக்கவில்லை. அதேபோல், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் நோயாளிகளைக் கடிக்கும் நிலையில் உள்ளன. நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!