அரசு மருத்துவமனையில் இனி ரூ.1,100-க்கு டயாலிசிஸ்... காப்பீடு இல்லாதவர்களுக்குப் புதிய வசதி!

 
டயாலிசிஸ்

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுநீரக நோயாளிகளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட முன்மொழிவு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் இனி குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ்!முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கு புதிய வசதி

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு மற்றும் தாமதம் காரணமாகப் பலர் தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில், காப்பீடு இல்லாதவர்களும் குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் பெறும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இனி குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ்!முதல்வா் காப்பீடு இல்லாதவா்களுக்கு புதிய வசதி

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் 146 டயாலிசிஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு டயாலிசிஸுக்கு ரூ.1,100 ஒதுக்கப்படும் நிலையில், அதே கட்டணத்தில் காப்பீடு இல்லாதவர்களுக்கும் சிகிச்சை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மேலாண்மை இயக்குனர் எஸ்.பி.அம்ரித் தெரிவித்துள்ளார்.