தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 561 வழக்குகள்... ஊழல் வழக்குகள் 20... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

 
தமிழக அரசு உயர்நீதிமன்றம்

 

தமிழகத்தில் எம்.எல்.ஏ., எம்.பி களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும்,    ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20  வழக்குகளும் உள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள்,  எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!


கடந்த முறை இந்த வழக்கில்,   தமிழகம் முழுவதும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.

நீதிமன்றம்


அதில், மாநிலம் முழுவதும் எம்.எல்.ஏ. - எம்.பி களுக்கு எதிராக ,இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட 561 வழக்குகள் உள்ளன எனவும்,  ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாகவும், அதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை ஜூன் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

From around the web