அதிர்ச்சி.. மதிய உணவில் விஷப்பூச்சி.. சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!
அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் விஷப்பூச்சி கிடந்ததால் பரபரப்பு...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாக்கங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் அரணை எனப்படுகின்ற விஷப்பூச்சி கிடந்துள்ளது. இதனை தெரியாமல் அவர்கள் உணவை சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பள்ளி முன்பு திரண்டு வந்த பெற்றோர் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அப்போது பள்ளியில் இருந்த ஆசிரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது திடீரென ஒரு பள்ளி மாணவி மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கால தாமதமாக வந்த மருத்துவத் துறையினர் இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களே மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து 15 மாணவர்கள் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் , கிராம மக்கள், மருத்துவத்துறையினர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!