அரசுப் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் குத்திக்கொலை... திருமணத்திற்கு மறுத்ததால் வாலிபர் வெறித்தனம்!

 
ரமணி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்திக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு ஆசிரியை மறுத்து வந்ததால் வாலிபர் வெறித்தனமாக பள்ளிக்குள் நுழைந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை குத்திக் கொலைச் செய்ததாக தெரிய வந்துள்ளது. 

ரமணி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.  இந்நிலையில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் (30). இவருக்குப் பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து மதனும், அவரது பெற்றோரும் முத்துவின் வீட்டிற்குச் சென்று ரமணியை பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணிக்கு மதனைத் திருமணம் செய்துக் கொள்வதில் விருப்பமில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்துப் பகுதியில் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். 

ரமணி

இதில் பலத்த காயம் அடைந்த ரமணி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதனை பிடித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web