ஆளுநர், அண்ணாமலை, அமித்ஷா வெற்றிக் கூட்டணியா !!வருவாரா வாசன் ?

 
அண்ணாமலை


ராமேஸ்வரத்தில், இருந்து இன்று 'என் மண், என் மக்கள் யாத்திரையை தொடங்க உள்ளார் அண்ணாமலை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங் கேற்கிறார். அதிமுக சார்பாக உதயகுமார் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது 164 நாட்களில் தமிழ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பயணம் மேற்கொள்கிறார், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி 11ம் தேதிக்குள் பயணத்தை முடிக்க உள்ளார்கள். சில கூட்டணி கட்சித்தலைவர்கள், கட்சி சார்பாக சிலர் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை
மத்தியில் 3வது முறையாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்க, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம். யாத்திரையின் பொழுது 10 முக்கிய நகரங்களில் கூட்டம் நடத்துகிறார்கள். அந்தந்த மாநகரங்களில் என்ன மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்றார்கள் என்ற அடிப்படையில் அந்தத்துறையின் அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும்.மாநாடு நடைபெறும் இடங்களில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள். புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி செய்தது என்ன? என்பதை பேசவுள்ளோம். என்கிறார் அண்ணாமலை !


இன்று மாலை அமித்ஷா தலைமையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கிறது. ஜூலை 29ம் தேதி (நாளை மறுநாள்) காலை 5.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்த பின் யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசுகிறார். பின் அப்துல் கலாம் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஆளுநரை சந்தித்து 2வது ஊழல் பட்டியல் வழங்கி இருக்கிறார்கள். மூன்று மிகப்பெரிய ஊழல்கள் நடந்ததற்கான பட்டியலை வழங்கியிருக்கிறார்கள்  

அண்ணாமலை


அமித்ஷா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை தயாராக இருக்கிறது. 6 அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர் அதைப்பற்றித்தான் பெரிதாக பேசுவார்கள் என்கிறார்கள், பொதுக் கூட்டத்தில், பாஜக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்கிறார்கள். அண்ணாமலை நடை பயணத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் உட்பட 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். அத்தோடு முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் அந்தந்த மாவட்ட முக்கிய பிரபலங்களையும் கட்சியில் இணைப்பதற்கான வேலைகள் ஒருபுறம் நடப்பதாக நம்பத்தகுந்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web