பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் - ஆளுநர் ஆட்சி அமல்!

 
பாகிஸ்தான் கைபர் பக்துன்வா

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான கைபர் பக்துன்வாவில் அவசரநிலையைப் பிரகடனம் செய்து, அங்குக் குடியரசுத் தலைவர் / ஆளுநர் ஆட்சியைப் பாகிஸ்தான் மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தான் கைபர் பக்துன்வா மாநிலத்தில் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களிலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதிலும் பிடிஐ மாநில அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டி வந்ததாகப் பாகிஸ்தான் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதைக் காரணம்காட்டி மாநில அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.