தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு?

 
விஜய் ரவி


இந்தியா முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் குடியரசு தினத்திற்கு ஆளுநர் கொடியேற்றி விழாவை சிறப்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்டில் 2025ம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள  அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.

ஸ்டாலின் -ஆளுநர் கவர்னர்


ஆனால், இந்த  தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக  கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து கடைசி வரை பதில் சொல்லாமலேயே இருந்து  வருகிறது.

விஜய்


இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்க தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், அமைச்சர்கள் மட்டும் கலந்து கொண்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web