நெகிழ்ச்சி... திடீர் மாரடைப்பு... பேருந்தை வயலில் இறக்கி 40 பயணிகளை காத்து உயிரைவிட்ட அரசு பேருந்து ஓட்டுனர்!
Oct 17, 2024, 10:44 IST
ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் 48 வயது சாம்பசிவ ராவ் . இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு பேருந்தில் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். பேருந்தில் சுமார் 40 பேர் இருந்தனர்.

இந்நிலையில் வழியில் சாம்பசிவ ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பேருந்தை நிதானமாக சாலை ஓரத்தில் நிறுத்த முயற்சி செய்தார்.ஆ னால் பேருந்து அருகில் உள்ள வயலில் இறங்கி நின்றது.

இதையடுத்து பேருந்தின் ஸ்டீரிங் மீது கவிழ்ந்து சாம்பசிவ ராவ் உயிரிழந்தார். இதற்கிடையில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உடலில் சிறிதும் காயமின்றி தப்பினர். தன் உயிரை பணயம் வைத்து பயணிகள் உயிரை காப்பாற்றிய சாம்பசிவ ராவுக்கு அவர்கள் நன்றிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தினர்.
