ஆதார் இலவச புதுப்பிப்பு காலக்கெடு ஜூன் 2027 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

 
ஆதார் ஆதார்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் ஆதார் அட்டைதாரர்கள், தங்களது அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

மத்திய அரசால் கடந்த பதின்மூன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இலவச ஆன்லைன் சேவை வரும் ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி தங்களின் சுய விவரங்களை ஆன்லைனில் மிக எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஆதார் அட்டை

பொதுமக்கள் தங்களின் ஆதார் விவரங்களை உரிய காலத்திற்குள் புதுப்பித்து, அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் ஆவணங்களை ஆன்லைனில் புதுப்பிக்காத மக்கள் அனைவரும் ஜூன் 2027-க்குள் விரைந்து புதுப்பித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.