காவல்துறையை வலுப்படுத்த ரூ.71.01 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பலப்படுத்தவும், இலஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நோக்கத்துடனும், தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களின் அன்றாட சில்லறை செலவினத்தை (எதிர்பாராச் செலவு நிதி) உயர்த்தி ரூ.71.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, காவல் நிலையங்களின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இந்த நிதி உயர்வு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்தார்.

மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையங்களின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த எதிர்பாராச் செலவு நிதி பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது: ரூ.3,750-லிருந்து ரூ.30,000 ஆக உயர்வு, ரூ.6,000-லிருந்து ரூ.40,000 ஆக உயர்வு, ரூ.8,250-லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு.

காவல் நிலையங்களின் நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் நிதிச் சிரமங்கள் இதன் மூலம் களையப்படவுள்ளன. மேலும், இச்செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, காவல் துறையில் ஊழலைத் தடுத்து முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்த நடவடிக்கை வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு ரூ.71,01,54,000 நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
