அரசுப்பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்துக் கொலை - 3 பேருக்கு வலைவீச்சு!

 
பெரம்பலூர் கொலை

பெரம்பலூரில் பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளிப் பகுதிநேர ஓவிய ஆசிரியர் புகழேந்தி (50) என்பவர் கோழிப்பண்ணையில் வைத்துக் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்த புகழேந்தி, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினரின் கோழிப்பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டும், கைகளில் வெட்டுக் காயங்களுடனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

குன்னம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குன்னத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), சிவசூரியா (30) மற்றும் அரியலூரைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் ஆகிய 3 பேர் ஆசிரியரைப் பண்ணையில் துரத்திச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய மணிகண்டன் உட்பட 3 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடித்த பின்னரே இக்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு குறித்துத் பொதுமக்கள் தங்கள் கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.