பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ₹10 குறைப்பு - மத்திய அரசு அதிரடி!

 
பெட்ரோல் பெட்ரோல்

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13-ஆக இருந்த கலால் வரி, இப்போது ரூ.3-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.10-ஆக இருந்த கலால் வரி, தற்போது பூஜ்ஜியமாக (Zero) குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு குறித்துப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசுத் தரப்பு அளித்துள்ள விளக்கம் கவனிக்கத்தக்கது:

இன்று (நவம்பர் 30) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்த வரி குறைப்பானது பெட்ரோல் நிலையங்களில் நேரடி விலை குறைப்பாக உடனடியாகப் பிரதிபலிக்காது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. அந்த நஷ்டத்தை ஈடுகட்டவும், எண்ணெய் நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் மட்டுமே இந்த வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு செய்யப்படாவிட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். அதனைத் தடுக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

சிலிண்டர் பெட்ரோல்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மேற்காசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிபொருள் விலையை நிலையாக வைத்திருக்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.