சிறு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் தரும் மத்திய அரசு!

 
மத்திய அரசு மோடி நிதியுதவி கடன் உதவித்தொகை

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கும், ஏற்கனவே சிறிய அளவில் வியாபாரம் அல்லது தொழில் செய்து வருபவர்களுக்கும் மத்திய அரசு பொன்னான வாய்ப்பை வழங்கி வருகிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் எவ்விதப் பிணையமும் இல்லாமல் எளிதாகக் கடன் பெற முடியும்.

புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், உற்பத்தித் துறை, வணிகம், சேவைத் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களில் ஈடுபடுபவர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் தொகையானது மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.

பணம் ரொக்கம் போனஸ் ஊக்கத்தொகை உதவித்தொகை

புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கிஷோர் பிரிவில் ஏற்கனவே சிறிய அளவில் தொழில் தொடங்கி அதனை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படுகிறது. தருண் பிரிவில் நடுத்தர அளவிலான தொழில்களை மேலும் மேம்படுத்தவும், பெரிய அளவில் முதலீடு செய்யவும் ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

வட்டி முதியோர் முதலீடு கடன் உதவித்தொகை ரூபாய் ரொக்கம் பணம்

இந்தியக் குடிமகனாக இருந்து, சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வம் அல்லது ஏற்கனவே சிறு தொழில் நடத்தி வருபவர்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாக முத்ரா கடன் பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் சாதாரண நடுத்தர மக்களும் தொழில் முனைவோராக மாறுவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக விளங்கி வருகிறது.