மக்களே உஷார்... சமைக்காத காய்கறி, முட்டை, இறைச்சியை சாப்பிடாதீங்க... இந்தியாவில் வேகமெடுக்கும் ஜிபிஎஸ் தொற்று!

 
ஜிபிஎஸ்


இந்தியா முழுவதும் ஜிபிஎஸ் பாதிப்புகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.   ஜிபிஎஸ் நோய்த்தொற்று பாதிப்பு நரம்பு மண்டலத்தை பாதித்து, தசை பலவீனமடையச்செய்து, உணர்ச்சி இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. பொதுவாக அனைத்து வயதினரையும் தாக்கும் அபாயம் உண்டு  என்றாலும், அதிகமாக முதியவர்களும், ஆண்களும், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பு கடுமையாகும் போது பக்கவாதம் ஏற்படும் எனவும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

ஜிபிஎஸ்


இதற்கு பிளாஸ்மா சிகிச்சையும், இம்யூனோகுளோபுலின் போன்ற சிகிச்சை மருந்துகள் வழங்கலாம். இந்த ஜிபிஎஸ் பாதிப்பை நரம்பியல் பரிசோதனை மூலமும், Emg பரிசோதனை மூலமும் கண்டறியலாம். நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்கறி, பழங்கள், இறைச்சிகளை நன்கு சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் சமைத்து உண்ண வேண்டும், சமைக்காத காய்கறி, முட்டை, இறைச்சியை உண்ணக்கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜிபிஎஸ் நோய்
இது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

From around the web